“பொய் சொன்னதுதான் தவறு. மற்றபடி, பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் தானே. அவரை துரோகி, சதிகாரன் என்றெல்லாம் கருத தேவையில்லை.” – K.R.அதியமான்
“அவரால் சிலர் பண விசயத்தில் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பது தவிர்த்து முற்றிலுமாக ஏமாற்றப்பட்டதாக எதுவும் இல்லை.” – கோவி.கண்ணன்
“உங்களுக்கு இப்போது அந்த பணத்தை திருப்பி புரட்டி கொடுத்துவிட்டார்தானே ?” – செந்தழல் ரவி
அடடா, என்ன ஒரு நியாய உணர்ச்சி? ஏண்டா திருடினாய் என்று கேட்டால், அதான் திருப்பி கொடுத்தாயிற்றே என்கிறார்கள்! Money Management தான் கோளாறு என்பவர்கள், ஒரு பதிவருக்கு உதவி செய்ய வசூலித்த பணத்தில் Mismanagement செய்வதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்? நடுநிலைமை வகிப்பதாக நாடகம் போடுவதற்கும், வெட்கமின்றி வக்காலத்து வாங்குவதற்கும் இடையில் மெல்லிய இடைவெளிதான் உள்ளது. உண்மையில் நடுநிலைமை வகிப்பவர்கள் ஒன்றா வாயை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பால் நிற்க வேண்டும். இல்லையேல், அவர்களின் சொற்களில் வெளிப்படுவது அயோக்கியத்தனத்தின் வக்காலத்து மட்டுமே.
அது சரி, நியாயஸ்தன் சிங்கை நாதன், முகம் தெரியாத தனக்கு இத்த்னை பேரு பணம் கொடுத்தாங்களே, அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் நன்றி தெறிவித்தாரா? அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவருக்கு பணம் கொடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்.
வாசகர்களுக்கு நீங்கள் வாக்கு கொடுத்திருந்தீர்கள். இனி, அடிக்கடி எழுதுவேன் என! சத்தியத்துக்கு கட்டுப்பட்டுவர் தானே நீங்கள்!
நடுநிலைமை வகிப்பவர்கள் ஒன்றா வாயை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பால் நிற்க வேண்டும்- இதுதான் சரியானது.